Monday, November 23, 2009



இனிய தமிழ் ஆர்வலர்களே

வணக்கம். எங்கள் பதிப்பகத்தின் முதல் பதிப்பாக இணையமும் இனிய தமிழும் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் கிடைக்கும் தமிழ் தகவல்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது.

நூலின் விவரம் வருமாறு:

இணையம்: அறிமுகமும் வரலாறும்
இணையவழி தமிழ் கற்றலும் கற்பித்தலும்
மின் நூலகம்
ஒருங்குறியீட்டு முறை
இணைய இதழ்கள்
வலைப்பூக்கள்
தமிழகப் பல்கலைக்கழகங்கள்
கல்விசார் இணைய தளங்கள்
வேலை வாய்ப்பு இணைய தளங்கள்

ஆகிய தலைப்புகளில் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன.

விலை; ரூபாய் 60

வெளியீடு: இசைப் பதிப்பகம்
சபரி நகர், டாக்டர் மூர்த்தி சாலை,
கும்பகோணம் - 612 001, தமிழ்நாடு.

ISBN: 978-81-908398-0-8௦

பக்கங்கள்: 128
ஆண்டு: சூன் 2009

Tuesday, January 15, 2008

பொங்குக பொங்கல்




பொங்குக எங்கும் பொங்கல்
உள்ளத்திலும் இல்லத்திலும்
உவகைப் பொங்கட்டும்
கனவிலும் நனவிலும்
இனியவை தங்கட்டும்
மங்கலம் பொங்கட்டும்
மாண்புகள் பெருகட்டும்

இருள் விலகி
ஒளி பிறக்கட்டும்
நாளைய விடியல்
நமக்காக இருக்கட்டும்

வாழ்வில் வசந்தம்
மலரட்டும்
செல்வம் செழிக்கட்டும்
தமிழர்த் திருநாளாம்
பொங்கல் திருநாளில்
மகிழ்ச்சிப் பொங்கட்டும்


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வளர் அன்புடன்

இசையரசன் & இசைச்செல்வி


Friday, January 4, 2008

சிரிப்பு வெடிகள் Jokes



வாழைப்பழத் தோளுக்கும் சீப்புக்கும் என்ன வித்தியாசம்?

முன்னது காலை வாரிவிடும்
பின்னது தலையை வாரிவிடும்


டாக்டர்: தூங்குவதற்கு மாத்திரைக் கொடுத்தேனே. என்ன செய்தீர்கள்?
நோயாளி:
அடடா! சாப்பிட மறந்து போய் தூங்கிவிட்டேன்



ஒரு யானையை சிங்கம் துரத்தி வந்தது. அதைப் பார்த்த எறும்பு யானையிடம் சொன்னது:
என் பின்னால் ஒளிந்து கொள்.







விடுகதைகள் RIDDLES



கடலில் கலக்காத நீர்
யாரும் குடிக்காத நீர் - அது என்ன?

அடிமேல் அடி வாங்கி
அனைவரையும் சொக்க வைப்பான் - அவன் யார்?

ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் - அது என்ன?

விடுமுறை இல்லாத கடை எது?

பள்ளில்லாமல் கடிப்பான் - அவன் யார்?

சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் - அது என்ன?




விடைகள்

கண்ணீர்
மேளம்
வாய்
சாக்கடை

செருப்பு
தீக்குச்சி


 

Saturday, December 29, 2007

A kind Appeal

Dear viewers

I start one more blog namely isamanam.
In this blog I am going to deliver my idea about Tamil criticism.