Wednesday, November 25, 2009

விடுகதை

ஒரு குருவி முட்டை போட்டுச்சு . அது ஏன் கீழ விழுல?
நான் புடிச்சுப்புட்டேன்

கருப்பு காடு நடுவுல ரோடு - அது என்ன?
தலை
கீழப் போட்டா சத்தம் கேக்காது - அது என்ன?
ஊசி
ரெண்டுப் பக்கம் அண்ணன் தம்பி நடுவில வாய்க்கால் அது என்ன?
மூக்கு
ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்ன வேறுபாடு?
ஆரஞ்சின் நிறம் ஆரஞ்சு ஆனா ஆப்இழிந் நிறம் ஆப்பிள் இல்ல.

நகைச்சுவை

ஒருநாள் அம்மா அல்வா செஞ்சாங்க. நான் அல்வா கேட்டேன். அம்மா இரு துண்டு போட்டு தரேன் என்று சொன்னாங்க. நான் தொவட்டுகிற துண்ட எடுத்துப் போட்டுகிட்டேன்.

அம்மா சமையல் செய்துக் கிட்டு இருந்தாங்க. நான் சிலிண்டர பெரிய வேடிகுண்டுன்னு நினச்சி அம்மாகிட்ட கேட்டேன். அம்மா இது வெடி குண்டு இல்ல சிளிண்டர்னு சொன்னாங்க.

Monday, November 23, 2009



இனிய தமிழ் ஆர்வலர்களே

வணக்கம். எங்கள் பதிப்பகத்தின் முதல் பதிப்பாக இணையமும் இனிய தமிழும் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் கிடைக்கும் தமிழ் தகவல்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது.

நூலின் விவரம் வருமாறு:

இணையம்: அறிமுகமும் வரலாறும்
இணையவழி தமிழ் கற்றலும் கற்பித்தலும்
மின் நூலகம்
ஒருங்குறியீட்டு முறை
இணைய இதழ்கள்
வலைப்பூக்கள்
தமிழகப் பல்கலைக்கழகங்கள்
கல்விசார் இணைய தளங்கள்
வேலை வாய்ப்பு இணைய தளங்கள்

ஆகிய தலைப்புகளில் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன.

விலை; ரூபாய் 60

வெளியீடு: இசைப் பதிப்பகம்
சபரி நகர், டாக்டர் மூர்த்தி சாலை,
கும்பகோணம் - 612 001, தமிழ்நாடு.

ISBN: 978-81-908398-0-8௦

பக்கங்கள்: 128
ஆண்டு: சூன் 2009